புதுக்கோட்டை அருகே எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்துக்கொண்ட 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்ணவேலாம்பட்டியில் எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடிய 4 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாசனை திரவியம் என நினைத்து எலி ஸ்பிரேயை எடுத்து குழந்தைகள் விளையாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.