கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அம்மன் அர்ஜுனன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது வீட்டின் முன் திரண்டு வருகின்றனர். அம்மன் அர்ஜுனன் கடந்த 2016-2021 வரை கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த நிலையில், 2021 முதல் தற்போது வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.