முத்ரா கடன் வழங்க மறுக்கும் கூட்டுறவு வங்கி: மக்கள் புகார்
புதூரில் முத்ரா லோன் வாங்கி திரும்ப கட்டிய 40 பேருக்கு, மானியம் தலா ரூ. 10 ஆயிரம் வழங்க தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் மறுப்பதாக புதூர் மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து புதூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கடன் வாங்கிய நெசவாளர்கள் 16. 09. 24 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் நெசவாளர்களாகிய நாங்கள் 40 பேரும் புதூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முத்ரா லோன் 2019ம் ஆண்டு வாங்கியுள்ளோம். எங்களுக்கு தொழில் சரியாக இல்லை, மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ளோம். மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு வரவேண்டிய மானியத் தொகை ரூபாய் 10 ஆயிரத்தை வங்கியிடம் இருந்து விரைந்து பெற்றுத்தரும் படி கேட்டுக் கொள்வதாக மனுவில் தெரிவித்துள்ளனர். இதில் சித்ரா கணேசன், முத்துமாரி, அம்பிகாவதி, அமிர்த கல்யாணி, வசந்தா, கஸ்தூரி, நாகரத்தினம், ஜோத ஈஸ்வரி, சந்திரா மணி, சித்ரா, சாந்தி, செந்தில் மணி, சந்திரா, ஜோதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.