அண்ணா பிறந்த நாள் விழா: அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை

84பார்த்தது
அண்ணா பிறந்த நாள் விழா: அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி. கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: தி. மு. கழகத்தை தோற்றுவித்தவரும், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை கழகத்தினருக்கு கற்றுத் தந்தவர் அறிஞர் அண்ணா.

அவர் முதலமைச்சராக இருந்த இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு என பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை, சுயமரியாதை திருமணச் சட்டம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தார். அன்னாருடைய 116-வது பிறந்தநாள் நாளை (செப்.,15) ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 8: 30 மணி அளவில் வடக்கு மாவட்ட தி. மு. க சார்பில் தூத்துக்குடி பாளைரோடு காய்கனி மார்க்கெட் சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா முழு உருவச் சிலைக்கு தி. மு. க. , சார்பில் மாவட்ட செயலாளரான என்னுடைய தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் ஊராட்சி மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கழக தோழர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

தொடர்புடைய செய்தி