சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்!

68பார்த்தது
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகளில் சென்ற 22 மீனவர்களை கடந்த மாதம் ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை கடற்படை அத்துமீறி இலங்கை கடல் பகுதியில் உள்ளே நுழைந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கைச் சிறையில் அடைத்துள்ளது இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களுக்கு சுமார் மூன்றரை கோடி ரூபாய் இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது இதைக் கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்த அபராத தொகை மற்றும் மீனவர்கள் விடுவிக்கப்படாதது தருவைகுளம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதையடுத்து இன்று தருவைகுளம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளையும் எவ்வித அபராத தொகையும் இல்லாமல் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக தருவைக்குளம் மீனவ கிராமத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டுப் படகு மீனவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி