சூர்யா இந்தியில் தூம்- 4 படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் முந்தைய பாகம் அனைத்தும் பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமாகும். கடைசியாக தூம் 3 திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. அமீர் கான் அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தகவல் உண்மையெனில் சூர்யா நடிக்கும் முதல் இந்தி திரைப்படம் இதுவே ஆகும். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.