மாட்டு வண்டி போட்டிகள்: சீறிப்பாய்ந்த காளைகள்!

52பார்த்தது
மாட்டு வண்டி போட்டிகள்: சீறிப்பாய்ந்த காளைகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது குருபூஜையை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 68 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

விளாத்திகுளம் அதிமுக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்த இப்போட்டியில் இரு பிரிவுகளாக நடைபெற்ற பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மைல் தூரமும் மற்றும் சிறிய மாடுகளுக்கு 4 மைல் தூரமும் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறமும் நின்று கண்டு ரசித்தனர்.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில் தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் வெற்றிபெற்றன. இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு சமுதாயத் தலைவர் செந்தூர் பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பரிசு கோப்பை மற்றும் பரிசுத்தொகையை வழங்கி கௌரவித்தனர்.

தொடர்புடைய செய்தி