10 மீனவர்கள் மீதான வழக்கு விசாரணை: 18ம் தேதி ஒத்திவைப்பு

58பார்த்தது
தூத்துக்குடி தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி இலங்கை கடற்படையாள
சிறைபிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் வாடி வருகின்றனர் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டங்களில் ஈடுபட்னர்

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி 22 மீனவர்களில் 12 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சுமார் மூன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது எஞ்சிய பத்து மீனவர்களுக்கான வழக்கு விசாரணை இன்று செப்டம்பர் 10ஆம் தேதிக்கு இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது

இந்நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி இன்று புத்தளம் நீதிமன்றத்தில் 10 மீனவர்கள் மீதான வழக்கு விசாரணை விசாரணைக்கு வந்தது அப்போது இலங்கை அரசு வழக்கறிஞர் இந்த 10 மீனவர்களுடன் சேர்த்து 11 வது நபராக இந்த விசைப்படையின் விசைப்படகின் உரிமையாளர் அந்தோணி தேன் தெனிலா வையும் சேர்க்க வேண்டும் என கூறினார் இதற்கு மீனவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டார் இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you