திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு;
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் குவிந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும்
கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு
எள், மற்றும் தர்ப்பபுள், வைத்து,
பிண்டம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து
தங்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.
பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு நான்கு முப்பது மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.