சங்கரலிங்கபுரம் தீண்டாமைச் சுவர்

65பார்த்தது
சங்கரலிங்கபுரம் தலித் மக்கள் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி சுடுகாட்டில் நள்ளிரவில் குடியேறும் போராட்டம்.

சங்கரலிங்கபுரம் 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை அதிரவைத்த சாதிய வன்கொடுமையை, அரச பயங்கரவாதத்தை சந்தித்த தூத்துக்குடி மாவட்டத்து கிராமம். ஒரு குடும்பம் ஒட்டுமொத்த மக்களையும் தனிமைப்படுத்தி, ஒதுக்கி வைக்குமளவிற்கு சுவரை கட்டி எழுப்பி இருக்கிறது.


இந்த தீண்டாமைச் சுவரை கோட்டைச்சுவர் போல எழுப்பியுள்ளார்கள். பொதுபயன்பாட்டிற்கும், கூடுவதற்கும் இடமில்லாத வகையில் வன்முறையாக ஆக்கிரமித்துள்ளது இக்குடும்பம். நூற்றுக்கணக்கான பட்டியல் குடும்பங்களை எதிர்த்து ஒற்றைக்குடும்பம் ஆக்கிரமிப்பது அதிகாரிகளின் ஆதரவில்லாமல் சாத்தியமாகி இருக்காது. பட்டியல் மக்களின் பொது சாலையையும் மறைத்து சுவரெழுப்பி வைத்துள்ளனர். இறுதியாக பல செண்ட் பொது நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளனர். இவற்றை பொறுக்க இயலாமல் கடந்த 23 நாட்களாக அம்மக்கள் அமைதியான முறையில் ஒன்றுதிரண்டு மாலைவேளையில் தர்ணா போராட்டத்தை நடத்துகின்றனர். முழக்கம் எழுப்பி பெண்களும், குழந்தைகளும் இரவுவரை அமர்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும், தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட வேண்டும். இதை திமுக அரசு முன்னெடுக்க மக்கள் கோரிக்கை.

தொடர்புடைய செய்தி