தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த காரைக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக கொலை உடலை கைப்பற்றி தருவைகுளம் போலீசார் விசாரணை
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மிக்கேல் இவரது படகில் காரைக்குடியை சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார்
இந்நிலையில் ஆனந்த் இன்று காலை தருவைகுளம் மீன் ஏள கூடம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார் இதை அடுத்து சம்பவ இடத்திற்கும் வந்த தருவைகுளம் காவல்துறையினர் ஆனந்தின் உடலை கைப்பற்றி ஆனந்த் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் எதற்காக கொலை செய்யப்பட்டார் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக ஆனந்த் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்