உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்லாமல் வெளியே பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது மேலும் பயணிகள் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் புகார் தெரிவித்தனர்
இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஸ்ரீவைகுண்டம் புறவழிச்சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டார் அப்போது ஸ்ரீவைகுண்டம் ஊருக்கு உள்ளே செல்லாமல் புறவழிச் சாலை வழியாக சென்ற ஒரு தனியார் பேருந்து மற்றும் ஐந்து அரசு பேருந்துகளின் டிரைவர்களை மடக்கிப் பிடித்து எச்சரிக்கை விடுத்ததுடன் ரூபாய் 60, 000 அபராதம் விதித்தார்
மேலும் இவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் பேருந்துகளின் பர்மீட்டும் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு ஊருக்குள் வராத அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அபராதம் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது