தூத்துக்குடி: பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை துவங்கி வைத்த ஆட்சியர்

51பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி கிராமத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் வழங்கி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கித் துவக்கி வைத்தார். 

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி ஊராட்சியில் கூட்டாம்புளி கிராமத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவைகளை வழங்கினார். 

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 988 நியாய விலைக் கடைகளில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 261 குடும்பக் கார்டுதாரர்கள், இலங்கைத் தமிழர்கள் 500 குடும்பங்கள் உள்ளிட்டவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கின. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி