தூத்துக்குடி: உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திட வேண்டும்: கோரிக்கை

81பார்த்தது
ஊரக உள்ளாட்சித் தேர்தலை காலதாமதமின்றி உடனே நடத்திட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் விடுத்துள்ள கோரிக்கை மனு: 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகின்ற ஜனவரி 5, 2025-உடன் முடிவடைகின்ற சூழலில் தற்போது வரை தேர்தல் நடைபெறுகின்ற அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை எனவே, காலதாமதமின்றி உள்ளாட்சி தேர்தல் நடத்திடவேண்டும். 

கொரோனா காலக்கட்டத்தில் எவ்வித செயல்பாடுமின்றி முடங்கியிருந்த இரண்டு ஆண்டுகளை கணக்கில் கொண்டு 27 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு 2 ஆண்டு காலம் கால நீட்டிப்பு செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக (அ) மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பஞ்சாயத்தில் பணியிலிருக்கின்ற ஊராட்சி செயலாளர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்திட வேண்டுகிறோம். 

மேற்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிப்பணிகள் தொய்வின்றி நடைபெற்று தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்குவதில் அரசின் நோக்கமும் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவடையும் என நம்புகிறோம். எனவே மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட ஆவண செய்யுமாறு தங்களை வேண்டிக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி