நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். பின்னர் அவர் கூறுகையில், "நடிகை என்னை காதலித்திருந்தால் இப்படி முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி. மாண்புமிகு 'அப்பா' ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார்.