தூத்துக்குடி மாவட்டம் முடித்தந்தானேந்தல் உள்ள அருந்தியர் காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் பொதுப்பாதை இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் பாதையை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆகையினால் தங்கள் பகுதிக்கு அரசு பொது பாதை அமைத்து தர வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் இறந்தவர்களை இறுதிச் சடங்கு செய்வதற்கு சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.