அமெரிக்காவில் தற்போது வாட்ஸ்அப் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயனர்கள் செயலி சரியாக வேலை செய்யவில்லை என்றும், மெசேஜ் அனுப்ப முடியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, அந்நிறுவனம் 10,000க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை இணைப்பு சிக்கல்களைக் குறிப்பிடுகின்றன. சில பயனர்கள் செய்திகளை அனுப்ப முடியவில்லை, பெற முடியவில்லை என்றும் புகார் அளித்துள்ளனர்.