தூத்துக்குடி: விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்த திமுகவினர்

58பார்த்தது
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆவது ஆண்டு விழா கன்னியாகுமரியில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். அப்போது அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்கண்டையன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர். இதுபோல் இந்த விமானத்தில் திமுக பொதுச் செயலாளர் அமைச்சருமான துரைமுருகன், திமுக துணை பொது செயலாளர் அ. ராசா, அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

தொடர்புடைய செய்தி