திருப்பரங்குன்றம்: பங்குனி பெருவிழா மார்ச் 5ல் தொடக்கம்

83பார்த்தது
திருப்பரங்குன்றம்: பங்குனி பெருவிழா மார்ச் 5ல் தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா மார்ச் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற மார்ச் 20ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெறுகிறது.
இத்திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 19ஆம் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தேர் பவனி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி