லாகூரில் இன்று (பிப்.,28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் ரத்தானது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதையடுத்து குரூப் பி-யில் 4 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.