நன்னிலம் - Nannilam

நன்னிலம்: 25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த விநோத திருவிழா

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் நல்லமாங்குடி பகுதியில் கைலாசநாதர் சிவகாமசுந்தரி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியாக அய்யனார் சுவாமி அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுகள் கழித்து இன்று(செப்.5) அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். தேரை பக்தர்கள் தோளில் சுமந்து நல்லமாங்குடி, சிகார்பாளையம், பாவேந்தர் நகர், குமாரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்தது. அப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பிறகு அய்யனார் சுவாமியை கழுத்தளவு தண்ணீர் உள்ள குளத்தில் இறங்கி தூக்கிச் சென்று மறு கரையை அடைந்தனர். மேலும் விவசாயம் செழிக்க வேண்டி வயல் வெளிகளும் சாமியை தூக்கி சென்றனர். இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சுவாமி புறப்பாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


திருவாரூர்
Sep 06, 2024, 01:09 IST/மன்னார்குடி
மன்னார்குடி

ரசாயன கலவையில் தயாரிக்கப்பட்ட 75 விநாயகர் சிலைகளுக்கு சீல்

Sep 06, 2024, 01:09 IST
மன்னார்குடியில் ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது உறுதியானதால் 75 விநாயகர் சிலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். விநாயகர் சதுர்த்தி நாளை(செப்.7) கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முறைமடைந்து உள்ளது. அதேபோல இரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்து தடை விதித்து வருகின்றனர். அந்த வகையில் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த இடத்தில் நேற்று முன்தினம்(செப்.4) மாற்ற சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சிலைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று(செப்.5) விநாயகர் சிலைக்கு சிலை தயாரிக்கும் இடத்திற்கு சென்ற மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்ட் அஸ்வத் ஆண்டோ, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா சப் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளில் 75 சிலைகள் ரசாயன கலவைகொண்டு தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் சிலைகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து சீல் வைத்தனர்.