வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் தெரு சாலையை சீரமைக்க வேண்டும்

78பார்த்தது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம். இந்த தெருவில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. தற்பொழுது இந்த குழாய்க்காக எடுக்கப்பட்ட மண் தெருக்கள் முழுவதும் பரவி மோசமாக காட்சியளிக்கிறது. கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் ஒரு வழி பாதையான இந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது மிகுந்த புழுதி புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால் வயதானவர்களும் குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் இந்த பிரதான சாலையில் அரசு பொது மருத்துவமனையும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் விவசாய கூட்டுறவு சங்கங்களும் நர்சரி பள்ளிக்கூடங்களும் பத்திரப்பதிவு துறையும் அமைந்துள்ளது. இந்த முக்கியமான சாலையை இதே நிலையில் வைத்திருந்தால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக அமையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்தி