மன்னார்குடியில் லாரி பழுது நீக்கத்தின் போது, லாரியில் இருந்த பேட்டரி வெடித்ததில் லாரி தீப்பிடித்து எரிந்தது.
திருவாரூர் மாவட்டம், கோபிரலயம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பழைய லாரி ஒன்றை வாங்கினார். அதில் உள்ள பழுதுகளை நீக்குவதற்காக மன்னார்குடி பைபாஸ் சாலையில் உள்ள பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் பட்டறையில் வேலைக்கு நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெல்டிங் பணியாளர்கள் லாரியில் வெல்டிங் செய்து பழுது நீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, லாரியில் இருந்த பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து லாரியில் இருந்த டீசல் டேங்க்கும் வெடித்ததால் லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவல் அறிந்து வந்த மன்னார்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இருந்தபோதிலும் லாரி முழுவதும் எரிந்து விட்டது.
இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.