*திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - வேளூர் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட வடக்கு வாய்க்கால் என்கிற தூண்டிக்காரன் வாய்க்காலில் அருகே நமது மாநில மரமான பனை மரங்கள், பனை மரக்கன்றுகள் என 25க்கும் மேற்பட்டவை மாவட்ட ஆட்சியர் அனுமதி இன்றி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டுள்ளன. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார்*. தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பனை மரங்கள், பனை கன்றுகள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும் *மாவட்ட ஆட்சியர் அனுமதி இல்லாமல் வெட்டக்கூடாது என்ற சட்டம் இருக்கும் நிலையில் நமது மாநில மரமான பனை மரங்கள் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் வெட்டி அழிக்கப்படுவது வேதனையை அளிப்பதாகவும் இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். *