மன்னார்குடியில் ரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது உறுதியானதால் 75 விநாயகர் சிலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்
மன்னார்குடி,
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முறைமடைந்து உள்ளது அதேபோல இரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்து தடை விதித்து வருகின்றனர். அந்த வகையில் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த இடத்தில் நேற்று முன்தினம் மாற்ற சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சிலைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று விநாயகர் சிலைக்கு சிலை தயாரிக்கும் இடத்திற்கு சென்ற மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்ட் அஸ்வத் ஆண்டோ, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா சப் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளில் 75 சிலைகள் ரசாயன கலவைகொண்டு தயாரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் சிலைகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து சீல் வைத்தனர்.