நாகப்பட்டினம் - Nagapattinam

திருமருகல் அருகே கல்லூரி மாணவி, உள்ளிட்ட 2 பேர் தற்கொலை

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் லட்சுமணன் (வயது 25). விவசாய கூலித்தொழிலாளி வீட்டின் அருகில் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்தவர் மதியத்திற்கு மேல் காணவில்லை என லட்சுமணனின் பெற்றோர்கள் தேடி உள்ளனர். பின்னர் கொல்லைப்புறத்தில் தேடிய போது வீட்டின் அருகில் புளிய மரத்தில் தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் லட்சுமணனின் உடலை கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இதை போல் திருமருகல் ஒன்றியம் மருங்கூரை சேர்ந்தவர் இளஞ்செழியன் மகள் துர்கா (வயது 21). இவர் திருவாரூரில் உள்ள திரு. வி. க கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் துர்கா கடந்த சில மாதங்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் துர்காவிற்கு தலைவலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது தலைவலி தாங்க முடியாமல் துர்கா தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் துர்காவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்

நாகப்பட்டினம்
Oct 06, 2024, 03:10 IST/நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

திருமருகல் அருகே கல்லூரி மாணவி, உள்ளிட்ட 2 பேர் தற்கொலை

Oct 06, 2024, 03:10 IST