நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் மகள் துர்கா (வயது 21). இவர் திருவாரூரில் உள்ள திரு.வி.க கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் துர்கா கடந்த சில மாதங்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று(அக்.03) அதிகாலையில் துர்காவிற்கு தலைவலி அதிகமாக உள்ளது. தலைவலி தாங்க முடியாமல் துர்கா தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் துர்காவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து துர்காவின் தாயார் அன்பழகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.