திருக்குவளையில் காங்கிரஸ்   பிரச்சார நடைபயணம்

52பார்த்தது
நாகை அருகே திருக்குவளையில்
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அகிம்சை அன்பை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ்  
பிரச்சார நடைபயணம் மேற்கொண்டனர்.


நாகை மாவட்டம் திருக்குவளை அருகேயுள்ள வாழக்கரை பகுதியில் இருந்து மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில்‌ அகிம்சை அன்பை வலியுறுத்தி பிரச்சார நடைபயணம் மேற்கொண்டனர். கீழையூர்  வட்டார காங்கிரஸ் கமிட்டி  தலைவர் என். சிங்காரவேலு தலைமையில் நடைபெற்ற பிரச்சாரப் பயணத்தை  மாவட்டத் தலைவர்  ஆர். என். அமிர்தராஜா துவங்கி வைத்தார். ஜனநாயக உரிமைகளையும் சமூக நீதியையும், சமத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் தேசபக்தி பாடல்களை இசைத்தபடி  சுமார் 2 கிமீ தூரம் திருக்குவளை கடைத்தெரு வரை காங்கிரஸார் பேரணியாக வந்தனர். தொடர்ந்து திருக்குவளை கடைத்தெரு பகுதியில், காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றப்பட்டு மகாத்மா காந்தி நினைவுகள் மற்றும் மது ஒழிப்பு  குறித்து பேசப்பட்டது.
இதில் மாநில பொதுக் குழு உறுப்பினர் எஸ். வெங்கடேஷ்,   மாவட்ட மகளிர் அணி தலைவி ஏ. தெய்வாணை,   உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி