திருமருகல் ஒன்றியம், நரிமணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி (2023-2024) திட்டத்தின்கீழ் ரூ. 23 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த வகுப்பறைகளை, மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா்.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் தலைமை வகித்தாா். மாவட்ட திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், எம்எல்ஏ முகமது ஷாநவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். டி. எஸ். சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா், ஒன்றிய பொறியாளா் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, ஊராட்சித் தலைவா் காா்த்திக் வரவேற்றாா். ஒன்றியக் குழு உறுப்பினா் மஞ்சுளா மாசிலாமணி நன்றி கூறினாா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.