அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன்

58பார்த்தது
முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக நாகை மாவட்ட செயலாளர் ஓஎஸ். மணியன் கீழ்வேளூரில் நடைபெறும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்திற்கு அவரது ஒட்டுனருடன் கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பூண்டி அருகே காரில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக திருபூண்டி காரைநகர் வளைவில் இருசக்கர வாகனத்தில் குறுக்கே வந்த திருப்பூண்டி காரை நகர் பகுதியை சேர்ந்த அன்பழகனை மீது மோதாமல் அவரை காப்பாற்ற காரை வளைத்து பெரியாச்சி கோவில் சுற்றுச்சுவரில் ஓட்டுநர் மோதினார் அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த திருப்பூண்டி காரை நகரை சேர்ந்த அன்பழகன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பாப்பா என்ற மூதாட்டியும் காயமடைந்தனர் அவர்களை மீட்டு திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் ஓஎஸ். மணியன் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இல்லாமல் உயிர் தப்பினார். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தற்போது கீழ்வேளூரில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒ. எஸ். மணியன் வாகனம் விபத்துக்குள்ளாது அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி