

திருவள்ளூர்: அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளூர் மாவட்டம் மணவூர் கந்தசாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா மணவூர் ஊராட்சியில் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா திருக்கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜையுடன், ஓம நிவர்த்தி, தீப ஆராதனை, மகா பூர்ணாகதி, பூஜையுடன் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் புனித நீர் ஊற்றப்பட்டது, இதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர், பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.