ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் பேட் அக்லி'. ரூ.250 கோடியில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் நாளை (ஏப்.10) உலகளவில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். தற்போது சென்னை ரோகினி தியேட்டர் வாசலில் அஜித் ரசிகர்கள் ஒன்றுகூடி, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.