மீண்டும் இணையும் 'கர்ணன்' கூட்டணி!

72பார்த்தது
மீண்டும் இணையும் 'கர்ணன்' கூட்டணி!
நடிகர் தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் கூட்டணியில், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி 'கர்ணன்' திரைப்படம் வெளியானது. அப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் இருவரும் இணையும் கூட்டணிக்கான அறிவிப்பை, போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி