திருத்தணி - Thiruthani

தந்தை இறந்த சோகத்திலும் 10ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளியான இவரது மனைவி தாமரைச் செல்வி இவர்களுக்கு மோனிஷா என்ற 10-ஆம்  வகுப்பு படிக்கும் மகள் மற்றும் சோனியா என்ற 2 மகள்களும், கர்ணா என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மோனிஷா 10-ம் வகுப்பு படித்து வந்ததால் கணக்கு பாடத்தில் நடைபெற்ற தேர்வு அன்று அவரது தந்தை முனுசாமி உடல் நிலக் குறைவால் உயிரிழந்தார். இருப்பினும் தந்தையின் உடல் வீட்டில் வைத்திருந்த நிலையில் தேர்வு எழுதினார். இதனையடுத்து இன்று வெளியான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மோனிஷா 500-க்கு 332 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தந்தை உயிருடன் இருக்கும் போது, மூத்த மகளான மோனிஷாவிடம், நன்றாக படித்து தாசில்தாராக பணியாற்ற வேண்டும். அதற்காக நன்றாக படித்து அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவி பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, பட்டப்படிப்பிலும் தேர்வாகி குரூப் 2 தேர்வை எழுதி தாசில்தாராக வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன் என மாணவி மோனிஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా