திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உடன் இணைந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் காரைக்கால் அம்மையார் பாடிய திருத்தலம், சனீஸ்வர மைந்தன் மாந்தி வழிபட்ட திருத்தலம் மாந்தி பூஜை நடைபெறும் சிறப்பு திருத்தலம் 1800 ஆண்டு பழமையான சிறப்பு வாய்ந்த இந்த திருத்தளத்தில்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவம் நிகழ்ச்சி திருக்கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகளுடன் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க கொடியேற்றுதல் நிகழ்ச்சி இன்று பங்குனி 18 நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் பங்குனி பிரம்மோற்சவத்தில் உற்சவர் வடாரண்யேஸ்வர சுவாமி
சிங்க வாகனம், சூரிய பிரபை வாகனம், சந்திரப் பிரபை வாகனம், அன்ன வாகனம், நாக வாகனம், புலி வாகனம், யானை வாகனம் போன்ற வாகன சேவைகளில் சுவாமி தினந்தோறும் ஒவ்வொரு வாகன சேவைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்
மேலும் இந்த பங்குனி மாத உற்சவத்தில் சிறப்பு நிகழ்வான ஏழாம் நாள் கமலத் திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது
மேலும் எட்டாம் நாள் வண்டார் குழலி உடனுறை தாயாருக்கும் வடாரண்யேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது, மேலும்
14 நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இறுதியாக ஏப்ரல் 20-தேதி- இரவு 7. 00 மணிக்கு ரிஷப வாகனம் விடையாற்றி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது