திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம் 7-நாள் கமலத் திருத்தேரோட்டம் சிறப்பு பூஜை உடன் திருக்கோயில் நிர்வாகத்தினர் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர் திரளான பக்தர்கள் மற்றும் சௌமியா அன்புமணி திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உடன் இணைந்த
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தமிழ் மாதம் பங்குனி -14 மார்ச் 28ஆம் தேதி சிறப்பு பந்த கால் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது
இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான பங்குனி பிரம்மோற்சவம் தேரோட்டம் கமல தேரில் அருள்மிகு ஸ்ரீ சோமாஸ்கந்தர் சிறப்பு புஷ்பா அலங்காரத்தில் எழுந்தருளினார்
சிறப்பு பூஜையுடன் தொடங்கியது இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் /செயல் அலுவலர் ரமணி, அறங்காவலர்;- சுரேஷ் ஆகியோர் பச்சைக்கொடி அசைத்து திருத்தேரை தொடங்கி வைத்தனர் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து முக்கிய வீதிகளில் சாமி உலா திருத்தேர் நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அவரது மனைவி சௌமியா பங்கேற்றார் சாமி தரிசனம் செய்தார் அவருக்கு மலர் மாலை பிரசாதங்கள் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கமலத் திருத்தேரை வடம் பிடித்து தேர் இழுத்தனர்.