குமரி அனந்தன் மறைவுக்கு மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் காலமான செய்தி, தேசிய நீரோட்டத்தில் பயணம் செய்பவர்களுக்கு மாத்திரமல்லாமல் தமிழ்ப் பற்றுள்ளவர்களுக்கும் பெரும் வேதனையை தரக்கூடிய ஒன்று. அவரது மகளும் தமிழக பாஜகவின் மூத்த தலைவரான சகோதரி தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.