திருத்தணி நகராட்சியில் பாப்பிரெட்டிப்பள்ளி பொதுமக்கள் குடியிருப்பு செல்லும் சாலையில் 7-அடி நீளமுள்ள பதுங்கிய மலைப்பாம்பு அச்சமடைந்த பொதுமக்கள் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மலைப்பாம்பை பிடித்து சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பாப்பிரெட்டிப்பள்ளி அருகே உள்ள மக்கள் குடியிருக்கும் பகுதியில் 150 வீடுகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் வழியில் சாலையோரம் கடந்து வந்த மலைப்பாம்பு திடீரென்று சாலையோரம் இருந்த பாறைகள் பகுதியில் பதுங்கியது. மலைப்பாம்பு பதுங்கி உள்ளதை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக திருத்தணி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் பாறைகளுக்கு நடுவில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை ஒரு மணி நேரம் போராடி லாவகமாக பிடித்தனர். இந்த மலைப்பாம்பு 7 அடி நீளம் இருந்தது. இந்த மலைப்பாம்பை பிடித்துச் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். மலைப்பாம்பு பிடிக்கப்பட்டதால் நிம்மதி அடைந்த இந்த பகுதி மக்கள் இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.