கட்டிடத் தொழிலாளி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

55பார்த்தது
திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு அருகே ஈச்சம் தோப்பு பகுதியில் சிவகுமார் இவர் கட்டிட தொழிலாளி இவர் சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது இரு சக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார் உடனடியாக அங்கிருந்த சிவகுமார் உறவினர்கள் மற்றும் ஊர்காரர்கள் சிவகுமார் படுகாயம் அடைந்த வரை அருகில் உள்ள பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் அழைத்து வந்து சேர்த்து உள்ளனர் அப்போது
பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க கூடியj அளிக்கவில்லை என்பதால் அவரது உயிர் பிரிந்து விட்டது
என்று அவர் மரணம் அடைந்து விட்டார் என்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததை அவரது மரணத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டை முன்வைத்து சிவக்குமார் உறவினர்கள் மற்றும் ஊர்காரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதட்டூர்பேட்டையில் இருந்து அத்திமஞ்சேரி பேட்டை செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைப்பிடித்து இவர்கள் சாலை மறியல் செய்தனர் சம்பவ இடத்திற்குச் சென்ற திருத்தணி போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை செய்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அளித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி