வருவாய்த்துறை அலுவலர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் கோரிக்கை மீது தமிழக அரசு அரசாணைகளை வெளியிட கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், Agri Stack பணியில் நேரடியாக வருவாய் ஆய்வாளர்களை ஈடுபடுத்துவதனை இரத்து செய்து தொடர்புடைய அலுவலர்கள் மூலம் இப்பணியை மேற்கொள்ள நடவடிக்சை எடுத்திட வேண்டும். அரசு அலுவலகங்கள் உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில் 31-03-2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும், தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்துதல், சரண் விடுப்பு வழங்குதல் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கங்கத்தினர் 100கும் மேற்பட்டவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி