திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வேலூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முத்துராஜ் திமுக வில் வேலூர் ஊராட்சியில் கிளை கழக செயலாளராக இருக்கிறார். மேலும் முத்துராஜ் ஒரு விவசாயி பொன்னேரிக்கு அருகே உள்ள கூடுவாஞ்சேரி என்ற ஊரில் ஆறு ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து அதில் விவசாயம் செய்து வந்தார். மேலும் விவசாயத்திற்காக வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. அது மட்டுமல்லாது குத்தகை எடுத்த நிலத்தில் கடந்த முறை நெற்பயிர் பயிரிட்டுள்ளார் அது மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டடுள்ளது தற்பொழுது அதில் தர்பூசணி பழத்தை பயிரிட்டு வளர்த்து வரும் நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளார். அது மட்டுமல்லாது வங்கியை சேர்ந்தவர்கள் இவரை தொந்தரவு செய்ததால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் நேற்று இரவு 12 மணி அளவில் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அதை பார்த்த அவரின் மனைவி சுசிலா மற்றும் மகன்கள் முத்துராஜன் உடலை கைப்பற்றிய நிலையில் இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிந்ததால் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.