நாகை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தனது தாய்க்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மகளை போலீசார் கைது செய்தனர். வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனித்தேர்வரான சுகந்திக்கு பதிலாக அவரது மகள் செல்வாம்பிகை ஆங்கிலத் தேர்வு எழுதி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் ஹால்டிக்கெட்டை பரிசோதித்ததில், ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, செல்வாம்பிகையை கல்வித்துறை அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.