GPay மூலம் ஈஸியாக ரூ.10 ஆயிரம் கடன் பெறலாம்
Google Pay மூலம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.9 லட்சம் வரை தனிநபர் கடனை எளிதாகப் பெறலாம். Google Pay நேரடியாக கடன்களை வழங்காது. வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்க பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. கடன் தொகையின் அடிப்படையில் EMI-ம் மாறுபடும். இதில், ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டும். சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் தொகை வழங்கப்படும். Google Pay-ல் கிடைக்கவில்லை என்றால், PhonePe மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.