நெல்லை பேட்டையை சேர்ந்த விஏஓ அந்தோணி தங்கத்துரை இன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். மாலை வீட்டின் பின்பக்க கதவு உடைத்ரு பீரோவில் சுமார் 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி மேரி அரசு மருத்துவமனையில் பணிபுரிவதால் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இந்நிலையில் உயர்வு வீட்டில் போலீசார் தற்போது அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.