மதுரை மாவட்டம் செல்லூரில் மதுபோதையில் தகராறு செய்த மகனை, கிரைண்டர் கல்லை தலையில் போட்டு அவரின் தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாசுதேவன் என்பவரின் இரண்டாவது மகன் லட்சுமணன் மதுவுக்கு அடிமையாகி வேலைக்கும் செல்லாமல், வாசுதேவனை தினமும் மதுபோதையில் கடுமையாக தாக்கி தகராறு செய்து வந்துள்ளார். அந்த வகையில், நேற்றும் லட்சுமணன் தகராறு செய்ததால், கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் வாசுதேவன் சரணடைந்துள்ளார்.