

மானூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருநெல்வேலி மத்திய மாவட்ட மானூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கல்லூரில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குட்டித்துரை ஏற்பாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.