திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு காலனி தெருவில் பல மாதங்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி சாலையில் தண்ணீர் தேங்கி சாக்கடை போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.