திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமம் தெற்கு தெருவில் கடந்த பல மாதங்களாக குடிநீர் பைப் லைனில் உடைபட்டு தண்ணீர் வீணாக சென்றது. இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து சீவலப்பேரி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று (பிப்ரவரி 9) பைப் லைன் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சீவலப்பேரி ஊராட்சி மன்ற பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.