நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி சார்பாக அம்பாசமுத்திரம் அடைய கருங்குளத்தில் அமைந்துள்ள அன்னை ஜோதி ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற 75 நபர்களுக்கு இன்று (பிப்ரவரி 20) மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் முகமது பாபு செய்திருந்தார். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.