திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று (மார்ச் 12) அதிகாலையிலும் பருத்திப்பாடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இவ்வாறு தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானிலை மந்தகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.